குல்தீப், ரோகித் அசத்தல்; இந்தியா அபார வெற்றி| Dinamalar

குல்தீப், ரோகித் அசத்தல்; இந்தியா அபார வெற்றி

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
குல்தீப்,ரோகித்,அசத்தல்,இந்தியா,அபார வெற்றி

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 'சுழலில்' அசத்திய குல்தீப் 6 விக்கெட் கைப்பற்றினார். 'பேட்டிங்கில்' விளாசிய ரோகித் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜோரான வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு குல்தீப் யாதவ் தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' ஜேசன் ராய் (38), பேர்ஸ்டோவ் (38), ஜோ ரூட் (3) சிக்கினர். பொறுப்பாக ஆடிய பட்லர் (53), ஸ்டோக்ஸ் (50) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 49.5 ஓவரில், 268 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் குல்தீப் 6 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தவான் (40) நல்ல துவக்கம் தந்தார். கேப்டன் கோஹ்லி (75) அரைசதம் கடந்து கைகொடுத்தார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 40.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (137), லோகேஷ் ராகுல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 14ல் லண்டனில் நடக்கவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:20:09 IST Report Abuse
Srinivasan Kannaiya எண்ணி துணிக கர்மம்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:19:56 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றி என்ற வெறி உதிரத்தில் கலந்து விட்டது..
Rate this:
Share this comment
Cancel
skarthik - udamalpet,இந்தியா
13-ஜூலை-201808:19:50 IST Report Abuse
skarthik very good play
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை