Don't Allow The Pro-Khalistani Meet In London, India Tells Britain | லண்டனில் சீக்கியர்கள் மாநாடு: இந்தியா எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லண்டனில் சீக்கியர்கள் மாநாடு: இந்தியா எதிர்ப்பு

Added : ஜூலை 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லண்டனில் சீக்கியர்கள் மாநாடு: இந்தியா எதிர்ப்பு

புதுடில்லி: பஞ்சாப்பைச்சேர்ந்த சீக்கியர்கள், பிரிட்டனில் சீக்கியர்களுக்கு நீதி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி லண்டன் பிரகடனம் என்ற பெயரில் மாநாடு நடத்திட திட்டமிட்டுளளனர். இதில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது போன்ற மாநாட்டினை நடத்திட இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவேஸ் குமார் கூறுகையில், சீக்கியர்கள் மாநாடு நடத்துவது உறுதியாகியுள்ளது. மாநாட்டை தடுத்திட பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். அங்குள்ள பெரும்பான்மையான சீக்கியர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புறவி்ல் உள்ளனர். அவர்கள் மாநாட்டை புறக்கணிப்பர் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X