பாம்பனில் புதிய பாலம் கட்ட ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் புதிய பாலம் கட்ட ஆய்வு

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாம்பனில், புதிய பாலம், கட்ட, ஆய்வு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் புதிய பாலம் அமைக்க, மண் பரிசோதனை துவங்கிஉள்ளது.
ராமேஸ்வரத்திற்கு தினமும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணியர், ஏராளமான வாகனங்களில் வருகின்றனர். பாம்பன் கடலில், 1988ல் அமைக்கப்பட்ட பாலத்தில், அதிக வாகனங்கள் வருவதால், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த, 30 ஆண்டு பழமையான இந்த பாலத்தின் நடுவில், இரும்பு இணைப்பு பிளேட் அடிக்கடி விலகி, அதிர்வு ஏற்படுகிறது.இதையடுத்து பயணியர் பாதுகாப்பு கருதி பாம்பன் கடலில், 650 கோடி ரூபாயில், புதிய சாலை பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில், தற்போதைய பாம்பன் பாலம், தோணித்துறை கடலோரத்தில் சென்னை தனியார் நிறுவன ஊழியர்கள், 30 அடி ஆழத்தில் துளையிட்டு மண்ணை, ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இம்மண்ணில் கலந்து உள்ள உப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிக்கு அனுப்புவர். இதன்பின் கட்டுமானத்திற்கான வேதியல் கலவை முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவங்கும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Muscat,ஓமன்
13-ஜூலை-201811:10:24 IST Report Abuse
Ramesh Sundram வெள்ளைக்காரன் கட்டிய பழங்கள் எல்லாம் இரும்பு போல இருக்கின்றன ஆனால் கட்டிங்/கமிஷன் வாங்கி கட்டிய பாலங்கள் எல்லாம் பல் இளிக்கின்றன எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் புதிதாக கட்ட போகிற பாலம் ஒரு பத்து வருடம் கூட தாண்டாது
Rate this:
Share this comment
Cancel
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
13-ஜூலை-201805:18:36 IST Report Abuse
Modikumar செயல் தல ஸ்டாலின், லெட்டர் பேட் கும்பலான சீமான், கௌதம் , திருமுருகன் காந்தி, தூசு தும்பட்டை எல்லாம் எங்கப்பா போனீங்க, ரமேஸ்வரத்தில புதுசா பாலம் கட்ட போறங்கலாம், இன்னும் ஏன் சுணக்கம். வட இந்திய ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் பாலம் காட்டும் பணியில் வேலை செய்வார்கள், மீனு குஞ்சுகள் செத்து போவும் , கடலின் உப்பு தண்ணி குறையும் என கேவலத்தின் கவுரவமான உங்கள் போராட்ட ங்களை ஆரம்பிக்க வேண்டியது தானே..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201804:25:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கட்டி முப்பது வருடத்தில் மூச்சை விடப்போகும் பாலம்.. ஊழல், ஊழல், ஊழல்.. வாகன நெரிசல் உண்மையில் வாகனங்களின் எண்ணிக்கையால் அல்ல. ஆண்டில் 365 நாளும் அந்த ஓட்டை பாலத்தில் பழுது பார்க்கிறேன் என்று சொல்லி ஒரு பக்கத்தை மூடி வைப்பதும், வாகன ஓட்டிகள் என்னமோ அது பீச்சாங்கரை மாதிரி மீதி இடத்தில காரை நிறுத்தி கற்று வாங்கி விட்டு, சுண்டல் வாங்கி தின்று விட்டு செல்வதாலும் ஏற்படும் நெரிசல் தான். அப்புறம் செய்த பாவத்தை தீர்க்க போலீஸ் சென்றிகளுடன் பறக்கும் வி.ஐ.பி வாகனங்களுக்காக தேவையில்லாமல் நிறுத்தப்படும் பொது ஜனங்களின் வாகனத்தால்.. ராமநாதபுரம் கலெக்டர் வருகிறாரென்று ஒன்னரை மணிநேரம் எங்கள் பேருந்து காக்க வைக்கப்பட்டது. எல்லாம் கொடுமை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை