3.5 Lakh Nirav Modi Ring And Tax Raids On Yogendra Yadav's Family | என்னை பழிவாங்குகிறது மத்திய அரசு :யோகேந்திரா யாதவ் ஆவேசம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என்னை பழிவாங்குகிறது மத்திய அரசு :யோகேந்திரா யாதவ் ஆவேசம்

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என்னை பழிவாங்குகிறது மத்திய அரசு :யோகேந்திரா யாதவ் ஆவேசம்

புதுடில்லி: எனது உறவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் கூறினார். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த யோகேந்திர யாதவ் ,கருத்துவேறுபாடால் பிரிந்தார். தொண்டு நிறுவன அமைப்பை நிர்வகிக்கிறார். ரூ. 13 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் தேடப்படும் குற்றவாளியான நிரவ் மோடியுடன் யோகேந்திர யாதவ் சகோதரிக்கு தொடர்பிருப்பதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து யோகேந்திர யாதவ் சகோதரியின் மருத்துவமனை மற்றும் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் ரூ. 6 லட்சத்திற்கு ரொக்கமாக பணம் கொடுத்து நிரவ் மோடி கடையில் நகை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த ரெய்டு நடந்தது. இது தொடர்பாக யோகேந்திர யாதவ் கூறுகையில், அரசியல் ரீதியாக என்னை பழிவாங்கிட மத்திய அரசு வருமான வரித்துறையினரை பயன்படுத்துகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
13-ஜூலை-201822:16:09 IST Report Abuse
adalarasan இது என்ன அநியாயமா இருக்கு,24 லக்சம் ரூபா, ரொக்க பணமாக உறவினர் வீட்டில் ரைடின் பொது, கிடைத்து இருக்கு என்று செய்தி வருது,?சட்டம் சும்மா விடுமா?அரசியல்வாதிகள், எதற்கு எடுத்தாலும் பழி வாங்குகிறார்கள் என்று கூறி, சட்டத்தை ஏமாற்ற முயல்கிறார்கள்?தனக்கு என்று வந்தால் ,மற்றவர்களை, குற்றம் கூறும் இவர்கள், எப்படி, மாற்றி பேசுகிறார் பாருங்க?
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜூலை-201809:12:26 IST Report Abuse
Sridhar பழியோ கிழியோ தப்பு செஞ்சுருக்கியா இல்லியா? அதுதான் மேட்டரு மாட்டிகிட்டவனெல்லாம் இதைத்தானே புலம்பறான் கடைசில கெஜ்ரி கூட இருந்தவன்ல ஒருத்தன் கூட யோக்கியன் இல்ல போலிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:35:10 IST Report Abuse
Srinivasan Kannaiya மடியில் கணம் இருந்தால்தான் வழியில் பயப்படவேண்டும்..
Rate this:
Share this comment
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஜூலை-201810:10:51 IST Report Abuse
ஜெயந்தன்rinivasan Kannaiya - muscat ,ஓமன் நீங்க எந்த காலத்தில் இருக்கிறீர்கள்..இப்போதெல்லாம் மடியில் கனம் இல்லை என்றால் தான் பயப்பட வேண்டும்..கனம் இருந்தால் பயமே இருக்காது..ஒரு பங்கை வீசி எரிந்து விட்டு தப்பித்து விடலாம்...உதாரணம் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ், இன்னும் பலர்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X