Pakistan: Former Prime Minister Nawaz Sharif, daughter Maryam to be arrested at Lahore airport, says minister | ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் துபாயில் கைது| Dinamalar

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் துபாயில் கைது

Updated : ஜூலை 13, 2018 | Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 Nawaz Sharif,Panama papers leak scandal,Nawaz Sharif arrested,பனாமா ஊழல் வழக்கு, சிறை தண்டனை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், நவாஸ் ஷெ ரீப், பனாமா பேப்பர்ஸ் லீக் ஊழல், நவாஸ் மகள் மரியம் நவாஸ்,நவாஸ் மருமகன் கேப்டன் சப்தார் , ராவல்பிண்டி அடியலா சிறை, பாகிஸ்தான் , நவாஸ் ஷெ ரீப் கைது, 
Panama scandal case, jail sentence, former prime minister of Pakistan Nawaz Sharif,
Nawaz daughter Mariyam Nawaz, Nawaz son-in-law Capt Saptar, Rawalpindi Adiala prison, Pakistan,

இஸ்லாமாபாத்: பனாமா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், பனாமா பேப்பர்ஸ் லீக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் நவாஸின் மகள், மருமகன் ஆகியோர் மீது ஊழல் மூலம் லண்டனில் சொத்துக்கள் வாங்கி குவித்தது விசாரணையில் தெரியவந்தது. புகார் எழுந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திட உச்சநீதின்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என கோர்ட்டு முடிவு செய்து கடந்த சின தினங்களுக்கு முன் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்து,, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக லண்டனிலிருந்து மகளுடன் புறப்பட்ட நவாஸ், அபுதாயி விமான நிலையத்தில் கைது தேசிய பொறுப்புடைமை ஏஜென்சியினரால் செய்யப்பட்டதாகவும், விமான நிலையத்திலேயே 7 மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இன்று காலை விமானம் மூலம் லாகூர் வந்ததும் பாக். போலீசாரால் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
13-ஜூலை-201815:00:12 IST Report Abuse
Kaliyan Pillai சசிகலாவிடம் ரெண்டு கோடி வாங்கி சொகுசு வசதிகள் செய்துகொடுத்தது போல மல்லையாவிடம் எத்தனை கோடிகள் வாங்கி அவருக்கு பாதுகாப்பு தருகிறார்களோ? யாருக்குத் தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201813:13:31 IST Report Abuse
சூரி துபாய் / அபு தாபி / பாகிஸ்தான் எங்கே கைது செய்தார்கள்?
Rate this:
Share this comment
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
13-ஜூலை-201813:11:50 IST Report Abuse
mariyappangopinathan நம்ம மல்லய்யா மேல தில் இருந்தா கை வச்சு பாக்க சொல்லு அந்த தேசிய பொறுப்புடைமை ஏஜென்சிய. இந்தியன் கிட்ட ஒரு பருப்பும் வேகாது. அங்க இருக்குற சுப்ரீம் கோர்ட் எல்லாம் இங்க கத்துக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை