Rajasthan: Khap panchayat bars 5-year-old from entering house for smashing bird egg | பறவை முட்டை உடைப்பு :5-வயது சிறுமிக்கு நூதன தண்டனை| Dinamalar

பறவை முட்டை உடைப்பு :5-வயது சிறுமிக்கு நூதன தண்டனை

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 பறவை முட்டை,  உடைப்பு ,5-வயது, சிறுமிக்கு, நூதன தண்டனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பறவை முட்டையை உடைத்த 5 வயது சிறுமிக்கு கிராமத்தார் வீட்டிற்குள் நுழைய தடை விதித்து விநோத தண்டனை வழங்கி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் முதல்வராக வசுந்தரராஜே இருந்துவருகிறார். மாநிலத்தில் புண்டி மாவட்டத்தில் உள்ளது ஹரிபுரா கிராமம் . இந்த கிராமத்ததை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த 5வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பறவை இனம் ஒன்று மழை கால துவக்கத்தை அறிவிப்பதாக அக்கிராமத்தினரால் நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அச்சிறுமி அந்த குறிப்பிட்ட பறவையின் முட்டை சிலவற்றை நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடினர். விசாரணையின் முடிவில் அச்சிறுமி தன்னுடைய வீட்டிற்குள் நுழைய தடை விதித்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளா். இதன்பின்னரே இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மான் சதுர்வேதியை விசாரணை நடத்த உத்தரவிட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கிராமத்தினர் அளித்த தண்டனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காதது கவலை தருகிறது. எனவும் சிறுமியின் குடும்பத்தினர் எந்த ஒரு பிரச்னையையும் சந்திக்கவில்லை எனவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில் விவகாரம் தொடர்பாக 10 பேர்கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 19-ம் தேதி இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் படி மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:01:42 IST Report Abuse
Nallavan Nallavan ம்ம்ம் .....
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201810:48:55 IST Report Abuse
ஸாயிப்ரியா முட்டையில் கோடிகணக்கில் ஆம்லெட் போட்டவர்கள் தெரிந்தே தவறு செய்தவர்கள்? தெரியாமல் புரியாமல் தவறு செய்த பாப்பா.நியாயமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
13-ஜூலை-201810:32:45 IST Report Abuse
மு. செந்தமிழன் நான் மட்டும் அந்த கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்திருந்தால் பாவங்களை போக்கும் பாவிகளிடம் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருப்பேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X