ஆந்திர கடற்கொள்ளையரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திர கடற்கொள்ளையரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Added : ஜூலை 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாகப்பட்டினம்: ஆந்திர கடல் பகுதியில், மீன் பிடித்த நாகை மீனவர்களை, ஆந்திர கடல் கொள்ளையர்கள், சுற்றிவளைத்து, இரண்டு விசைப் படகுகள் மற்றும் 19 மீனவர்களை சிறை பிடித்துள்ளனர்.
நாகை, அக்கரைப்பேட்டையில் இருந்து, 7ம் தேதி, மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நாகைக்கு தெற்கில், இலங்கையின் அச்சுறுத்தல் தொடர்வதால், வடக்கு கடல் பகுதியில், 10க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை, ஆந்திரா எல்லையை ஒட்டிய கடல் பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு, நான்கு சிறிய படகுகளில், பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள், படகுகளுடன் வேறு பகுதிக்கு செல்ல முயன்றனர். இதில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த இருவரது படகுகளை சுற்றி வளைத்த ஆந்திர கடற்கொள்ளையர்கள், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 'எங்களிடம் பணம் ஏதுமில்லை' என, தமிழக மீனவர்கள் கூறியதால், ஆவேசமடைந்த கடற்கொள்ளையர்கள், இரு விசைப் படகுகள், 19 மீனவர்களை சிறை பிடித்து, ஆந்திர மாநில கடலோர பகுதிக்கு இழுத்துச் சென்று உள்ளனர்.இது குறித்து, மற்ற மீனவர்கள், நாகை மீனவர்களுக்கு, 'வாக்கி டாக்கி'யில் தகவல் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் மீன்வள துறை அதிகாரிகளிடம், மீனவர்கள் மற்றும் விசைப் படகுகளை மீட்டுத் தர கோரி, மனு அளித்தனர்.இந்த சம்பவம், நாகை மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை