தமிழக அணைகளுக்கு அருகே சூரியசக்தி நிலையங்கள் திட்டம் :  மின்சாரமும் கிடைக்கும், நீராவியாதலும் தடுக்கப்படும் : மத்திய அரசின் யோசனையை ஏற்கிறது மாநில அரசு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக அணைகளுக்கு அருகே சூரியசக்தி நிலையங்கள் திட்டம் :  மின்சாரமும் கிடைக்கும், நீராவியாதலும் தடுக்கப்படும் : மத்திய அரசின் யோசனையை ஏற்கிறது மாநில அரசு

மத்திய அரசின் யோசனையை ஏற்று, பவானிசாகர், வைகை, மேட்டூர் அணைகளுக்கு அருகில், 250 மெகாவாட் திறனில், தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மின்சாரம் கிடைப்பதுடன், நீராவியாதலும் தடுக்கப்படும்.

தமிழகத்தில், பல நிறுவனங்கள், 2,138 மெகாவாட் உற்பத்தி திறனில், நிலப் பகுதியில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் இருந்து, தினமும் சராசரியாக, 1,500 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.

நிதியுதவி :

ஆறு, கால்வாய் போன்ற நீரோடைகள் மீது, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும்படி, தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு

அறிவுறுத்தி வருகிறது.இதற்கு, நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை; தண்ணீர் ஆவியாவதும் தடுக்கப்படும். உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதுடன், மணல் கொள்ளை போன்ற முறைகேடுகள் நடக்காது. குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில், ஆறு, கால்வாய்கள் மேல், சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதற்கு, மத்திய மின் துறையும், மானியத்துடன் கூடிய நிதியுதவி அளிக்கிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர்; தேனி - வைகை; சேலம் - மேட்டூர்

அணைகளுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள் மேல், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின், 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன், மின் வாரிய அதிகாரிகள், சமீபத்தில் விரிவாக ஆலோசனை நடத்திஉள்ளனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: குஜராத்தைப் பின்பற்றி, சென்னைக்கு அருகில் உள்ள பாலாற்றின் மேல், சூரியசக்தி மின்

நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
250 மெகாவாட் : அங்கு, தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. கால்வாய் மேல் அமைப்பதை விட, தண்ணீரின் மேல் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால், அதிக மின்சாரம் கிடைக்கும்.நிலம் கையகப்படுத்துதல், சேதம் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் இல்லை என்பதால், எதிர்ப்பும் இருக்காது. இதனால், பவானிசாகர், வைகை, மேட்டூர் அணைகளுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளின் மேல், 250 மெகாவாட் திறனில், தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, விரிவாக ஆய்வு செய்யப்படும். தண்ணீரின் அளவு அதிகரிப்பு, குறைவதற்கு ஏற்ப, மின் நிலையங்களும் மிதக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
14-ஜூலை-201821:14:52 IST Report Abuse

rmrஅரசு அலுவலங்களில் ரயில் நிலையம் , பஸ் போக்குவரத்து நிலையம் இங்க எல்லாம் எதுக்கு விட்டு வச்சுருக்கீங்க அங்கேயும் வைக்கலாம்

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-ஜூலை-201818:40:56 IST Report Abuse

jaganமிஷநரி எதிர்ப்பை இன்னும் காணோம் ?

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜூலை-201818:30:40 IST Report Abuse

Sahayamஆமாம்சாமி அரசு வேறு என்ன செய்ய முடியும் ?

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X