லாகூர் விமான நிலையத்தில் நவாஸ் ஷெரீப் கைது! : பாகிஸ்தான் முழுவதும் பெரும் பதற்றம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கைது!
லாகூர் விமான நிலையத்தில் நவாஸ் ஷெரீப்...
பாகிஸ்தான் முழுவதும் பெரும் பதற்றம்

லாகூர்: அண்டை நாடான, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து விமானம் மூலம், லாகூர் விமான நிலையத்தில், நேற்று இரவு வந்திறங்கியபோது, அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது மகளையும், பாக்., போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

லாகூர் , நவாஸ் ஷெரீப், கைது, பாகிஸ்தான்


'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் விவகாரம் தொடர்பாக, பாக்., முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக, மூன்று ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.இவற்றில் ஒன்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில், அவன்பீல்டு பகுதி யில், நான்கு சொகுசு வீடுகளை வாங்கியது. இந்த குற்றச்சாட்டை, நவாஸ் ஷெரீப், முதலில் மறுத்தார்; அவை, தன் மகன் உசேன் நவாசுக்கு சொந்தமானவை, என, அவர் கூறினார்.

10 ஆண்டு சிறை :

கடைசியில், அந்த வீடுகளில், 1993 முதல் வசித்து வருவதாக, நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த, பாக்., நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.அதில், நவாசுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; அவரது மகள் மரியமுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப் மனைவி, பிரிட்டன் தலைநகர் லண்டனில், புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும், சில ஆண்டுகளாக, லண்டனிலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில், நவாசும், 68, அவரது மகள் மரியமும், 44, பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, பாக்.,கின் லாகூர் நகருக்கு விமானத்தில் நேற்று புறப்பட்டனர். இடையில், அபுதாபி விமான நிலையத்தில் விமானம் நின்ற போது, நவாஸ் ஷெரீப் கூறியதாவது: லாகூர் சென்றபின், நேரடியாக, என்னை சிறைக்கு அழைத்துச் சென்று அடைப்பர் என எதிர்பார்க்கிறேன். பாக்., மக்களுக்காக, வருங்கால தலைமுறையினருக்காக, இந்த தியாகத்தை செய்கிறேன். இதுபோன்ற வாய்ப்பு, என் வாழ்நாளில் மீண்டும் வராது. பாக்.,கின் எதிர்காலத்தை, நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, எடிகாட் விமானம் மூலமாக, நேற்று இரவு, லாகூர் விமான நிலையத்திற்கு, நவாஸ் ஷெரீப்பும், மரியமும் வந்திறங்கினர். அங்கு தயாராக இருந்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அங்கிருந்து அவர்கள் இஸ்லாமாபாத்திற்கு அழைத்து செல்லப் பட்டனர். முன்னதாக, அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, ஷெரீப்பின், பி.எம்.எல் - என் கட்சியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பலத்த பாதுகாப்பு :

விமான நிலையம் அருகிலும்,லாகூர் நகர் முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி, என்.ஏ.பி., எனப்படும், தேசிய பொறுப்புணர்வு கழக தலைவர், ஜாவேத் இக்பால் பிறப்பித்த உத்தரவுப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை லாகூர் மாகாண நிர்வாகம் எடுத்தது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகதகவல்கள் கூறுகின்றன.

Advertisement

நவாஸ் வருகையையொட்டி, லாகூரில், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.நவாஸ், மரியம் கைது நடவடிக்கைகளை ஒளிபரப்ப, ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

அடிதடியில் இறங்கிய நவாஸ் பேரன்கள் கைது :

பிரிட்டன் தலைநகர் லண்டனில், நவாஸ் ஷெரீப் எதிர்ப்பாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், நவாஸின் பேரன்கள், ஜுனைத் ஸப்தர், ஜக்காரியா ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை, அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து இருவரையும், லண்டன் போலீசார் கைது செய்தனர். இவர்களில், ஜுனைத்ஸப்தர், நவாஸ் மகள் மரியமின் மகன்;ஜக்காரியா, நவாஸ் மகன் உசேனின் மகன்.


ஜுனைத் ஸப்தர் கூறுகையில், ''அவன்பீல்டில், எங்கள் வீடு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் சிலர், என் முகத்தில் காறி துப்பினர்; என்னை தாக்கவும் முயற்சித்தனர். சிலர், குடைகளை என் மீது வீசினர்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
14-ஜூலை-201819:47:48 IST Report Abuse

Solvathellam Unmaiஇங்க ஒருத்தன் வாயிலே வடை சுடுறான்... அவனை எப்ப பிடித்து உள்ளே போடுவார்கள்?

Rate this:
14-ஜூலை-201813:14:20 IST Report Abuse

வினோத்,அறந்தை.கோர்ட்,தீர்ப்பு,இந்த விசயத்துல நாம பாகிஸ்தான்கிட்ட கத்துக்கனும்..அடிக்கிறத இஸ்ரேல்ட கத்துக்கனும்... பட் ரெண்டுமே இங்க இல்ல....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-ஜூலை-201811:39:48 IST Report Abuse

தங்கை ராஜாஇந்தியர்களை விட பாகிஸ்தானியர் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் நம்மால் பதவியில் உள்ள ஒரு பிரதமர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்க முடியுமா பதவி நீக்கி குற்றத்தை நிரூபித்து சிறைக்கு அனுப்ப முடியுமா........கைத்தடியை தப்பவிட ஒரு கவர்னர் பதவி போதுமென்ற நிலையில் நீதிமான்கள் இருக்கும் வரை அதிகாரம் அசைக்க முடியாதது. செல்லமேஸ்வர்கள் பாவம்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜூலை-201817:07:46 IST Report Abuse

dandyஹி ஹி ஹி 60 ஆம் ஆண்டுகளிலேயே பாகிஸ்தானில் வெளிநாடு கார்கள் தயாரிக்க தொடக்கி விடார்கள் ..தொலை காட்சி ..COCA COLA ...மிக சிறந்த தொலைபேசி வசதி எல்லாம் வந்துவிட்டது. ????? அனால் அங்குள்ள நீதிமன்றம் ..போலீஸ் எல்லாம் சுதந்திரமாக இயங்குகின்றன .. ????...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X