நம்பிக்கையில்லா தீர்மானம் : சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சி Dinamalar
பதிவு செய்த நாள் :
நம்பிக்கையில்லா தீர்மானம்
சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சி

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போது, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வதற்கான முயற்சியில், தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்,சந்திரபாபு நாயுடு,முயற்சி

ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், தெலுங்கு தேசம் அங்கம் வகித்தது.ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாததால், தே.ஜ.,

கூட்டணி அரசில் இருந்து, தெலுங்கு தேசம் வெளியேறியது.'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதாக, பா.ஜ., வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், தே.ஜ., அரசில் இருந்து வெளியேறினோம்' என, சந்திரபாபுடு நாயுடு கூறினார்.


சிறப்பு அந்தஸ்து :

இந்தாண்டு துவக்கத்தில், மத்திய அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்ய, சந்திரபாபு நாயுடு முயற்சித்தார்.ஆனால், பார்லிமென்ட் பல முறை தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டதால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.ஆந்திராவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஒய்.எஸ்.ஆர்., - காங்., உள்ளிட்ட மாநில கட்சிகள், 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரவில்லை' என, தெலுங்கு தேசம் கட்சியை குற்றம்சாட்டி வருகின்றன.

Advertisement


ஆதரவு :

இந்நிலையில், வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தாக்கல் செய்யும் முயற்சிகளில், சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதற்காக, தோழமை கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
14-ஜூலை-201821:04:19 IST Report Abuse

samkeyமுதுகில் குத்துவதே இந்த ஆளுக்கு velai

Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
14-ஜூலை-201819:31:36 IST Report Abuse

Venkateshமத்திய பாஜக அரசு இதை எதிர் கொள்ளுமா? உட்கட்சியில் குமுறல், கூட்டணியில் குழப்பம்,எதிர் கட்சிகள் ஒர் அணியில் திரண்டு வருவது ,மத்திய ஆட்சியாளர்களுக்கு சிரமம் தான்

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-ஜூலை-201814:59:54 IST Report Abuse

Vijay D Ratnamஅது என்ன ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து. எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கவேண்டும்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X