● பிறப்பு சான்றிதழில் குளறுபடி ● ராமேஸ்வரம் மீனவர் குடும்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

● பிறப்பு சான்றிதழில் குளறுபடி ● ராமேஸ்வரம் மீனவர் குடும்பம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் மீனவர்கள் குழந்தை பிறப்பு சான்றிதழில் பெயரில் குளறுபடி உள்ளதால், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் பகுதியில் 40 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேலான மீனவ குழந்தைகள் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கின்றனர். இம்மாணவர்கள் பொது தேர்வுக்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை வழங்க பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.30 சதவீத மாணவர்களின் பிறப்பு சான்றிதழில் பெயரில் பிழை உள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் பிறந்தவர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகத்திலும், பாம்பன், தங்கச்சிமடத்தில் பிறந்தவர்களுக்கு ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்திலும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பிழை குறித்து மீனவர்கள் முறையிட்டால், 'கணினி மூலம் வழங்கிய சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது'என அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த தேதிக்குள் சான்றிதழ் கொடுக்க முடியாத நிலை உள்ளதால், குழந்தைகள் கல்வி எதிர்காலம் பாதிக்குமோ என மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.பேட்ரிக் கூறுகையில் :கிறிஸ்தவ மாணவர்கள் பெயரை புரிந்துணர்வதில் சான்றிதழ் பதிவு அதிகாரியிடம் குழப்பம் உள்ளதால், பல மாணவரின் பெயரில் குளறுபடி உள்ளது. திருத்தம் செய்ய கோரினால், சென்னை பதிவுதுறை அலுவலகத்தில் திருத்தம் செய்து கெஜட்டில் வெளியிட வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு காலதாமதமும், வீண் அலைச்சல், கூடுதல் செலவாகும். எனவே மாணவர் நலன் கருதி சிறப்பு முகாம் நடத்தி பெயர் திருத்தம் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X