கிராம சுயாட்சி இயக்கத்தில் 50 ஆயிரம் எல்.இ.டி., பல்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சுயாட்சி இயக்கத்தில் 50 ஆயிரம் எல்.இ.டி., பல்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம் கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் எல்.இ.டி., பல்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்கத்தில்(கிராம ஸ்வராஜ் அபியான்), ஏப்.,14 முதல் மே 5 வரை தாழ்த்தப்பட்ட மக்கள் 75 சதவீதம் வரை வாழும் கிராமங்களை தேர்வு செய்து, மத்திய அரசின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கி கணக்கு, விபத்து காப்பீடு, உயிர் காப்பீடு, மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டம், வீடுகளுக்கு எல்.இ.டி., பல்பு வழங்குவது ஆகிய ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் உள்பட நாட்டில் உள்ள 117 வளர்ந்து வரும் மாவட்டங்களில் உள்ள 45,137 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், மாவட்டத்தில் 342 கிராமங்களில், செயல்படுத்தப்படுகிறது. இந்த கிராமங்களில் வழங்குவதற்காக 50 ஆயிரம் எல்.இ.டி., பல்புகள் மாவட்டத்திற்கு வந்துள்ளன. வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உதவியுடன் இந்த பல்புகள் அந்தந்த கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகின்றன. ஒரு ஆதார் அடையாள அட்டைக்கு 10 எல்.இ.டி., பல்புகள் பெறலாம். ஒரு பல்புக்கு 60 ரூபாய் செலுத்தி இதனை பெறலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X