இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இதே நாளில் அன்று

ஜூலை 14, 1942
கா.காளிமுத்து: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, ராமுத்தேவன்பட்டியில், 1942, ஜூலை, 14ல் பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லுாரியில், எம்.ஏ., தமிழ் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார். தன், 13ம் வயதிலேயே காளிமுத்து, மேடை பேச்சாளரானார். ஆரம்பத்தில், தி.மு.க.,வின் மாணவரணி அமைப்பாளராக இருந்தார். 1971-ல் நடந்த தேர்தலில், சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனார். 1972-ல், எம்.ஜி.ஆர்., துவக்கிய, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். 1977, 1980, 1984-ல், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 1989ல் சிவகாசி, எம்.பி.,யானார். அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி, விவசாயத் துறைகளில் அமைச்சராக இருந்தார். 2001ல், தமிழக சட்டசபை சபாநாயகரானார். 2006, நவ., 8ல் காளிமுத்து காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:08:14 IST Report Abuse
Bhaskaran பல்லாவரத்தில் எங்கள் குடியிருப்புக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் முதல் நாள் இரவு ஜெ யை விமர்சித்து கடுமையாக பேசினார் மறுநாள் மாலையில் ஜெ யை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார் இதுதான் அரசியல் போலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை