ராமநாதபுரத்தில் குடிநீர் திருட்டு மின் மோட்டார் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் குடிநீர் திருட்டு மின் மோட்டார் பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் நகராட்சி வண்டிக்காரத்தெரு, காட்டுப்பிள்ளையார் கோயில் தெருக்களில், மின் மோட்டார் இயந்திரங்களை பொருத்தி குடிநீர் எடுத்த 16 வீடுகளில் மோட்டார் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்தும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பல இடங்களில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவது தெரியவந்தது. இதன் காரணமாக பலருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் அதிகாரிகள் வண்டிக்காரத்தெரு, காட்டுப்பிள்ளையார்கோயில் தெரு பகுதியில் நேற்று காலை குடிநீர் வினியோகத்தின் போது சோதனை நடத்தினர். இதில் 16 வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தது தெரியவந்தது. அந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை