வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊரணி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊரணி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முதுகுளத்துார், முதுகுளத்துார் வட்டம் புழுதிக்குளம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் ஊரணி இல்லாததால் மழை தண்ணீரை சேமித்து வைக்க முடியாமலும் தண்ணீர் வீணாக்கப்பட்டு வந்தது.கிராமமக்கள் சார்பில் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக தேசிய நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் திட்டத்தின் கீழ் 8 லட்ச ரூபாய் ஓதுக்கீடு செய்தனர்.தற்போது புதிய ஊரணி அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது.புதிய ஊரணி அமைந்துள்ள இடத்தை கலெக்டர் நடராஜன்,சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை