திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பழங்கால கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பழங்கால கண்காட்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் தொல்பழங்காலம் பற்றிய கண்காட்சியும், கருத்தரங்கமும் நடந்தது.மாணவி தி.திவின்பரியா வரவேற்றார். ஒவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் தலைமை வகித்தார்.பழைய கற்காலம் குறித்து மாணவிகள் ச.சந்திரா ஸ்ரீ, இடைக்கற்காலம் குறித்து மு.அனிஷா, புதிய கற்காலம் குறித்து ச.ஜமுனா, இரும்பு கற்காலம் குறித்து ரா.கோகிலா, சங்ககாலம் குறித்து ச.ஜாஸ்மின் பேசினர். மாணவர் து.மனோஜ்குமார் நன்றி கூறினார். கோ.பிரியா நிகழச்சிகளை தொகுத்து வழங்கினார். கண்காட்சியில் ராமநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் இடம் பெற்றன. ஏற்பாடுகளை மாணவர்கள் முகமது லபிப், முகமது நஜீப், அபுரார் அகமது செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X