ஆட்டோ டிரைவருக்கு சிறை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவருக்கு சிறை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் ராமச்சந்திரன்,54, இவர் 2011 பிப்., 16 ல் ரோந்துப்பணியில் இருந்த போது, திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரவி,34, ராஜா,31, சரவணன்,32, முருகன்,27, ஆகியோர் தகராறு செய்தனர். விசாரித்த ஏட்டு கோபாலகிருஷ்ணனை தாக்கினர். காயமடைந்த இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவரது புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமைக்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சிவப்பிரகாசம், ரவி என்பவருக்கு 6 மாத சாதாரண சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மற்றும் ராஜா, சரவணன், முருகன் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை