'பாதாள சாக்கடை திட்டம் டிசம்பரில் துவக்கம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பாதாள சாக்கடை திட்டம் டிசம்பரில் துவக்கம்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : 'பல ஆண்டுகளாக எதிர்பார்த்த, மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், டிசம்பரில் துவக்கப்படும்' என, பெருங்குடி மண்டல மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அறிவிக்கப்பட்டது.பெருங்குடி மண்டல்திற்கு உட்பட்ட, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம், மண்டல அலுவலத்தில் நேற்று நடந்தது. தென்சென்னை, எம்.பி., ஜெயவர்த்தன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள், எம்.பி., - எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள், மண்டல அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இம்முகாமில், பொதுமக்கள் மற்றும் நலச்சங்கம்சார்பில், 183 புகார் மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட ஜெயவர்த்தன், 'புகார் மனுக்களுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும்' என, உறுதி அளித்தார். பின், மனுக்கள் குறித்து, அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதையடுத்து, 'உள்ளகரம், புழுதிவாக்கம், பெருங்குடி பகுதி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள், செப்டம்பரில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். 'மடிப்பாக்கம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், டிசம்பரில் துவக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை