மருதன்தோப்பு மண் சாலையில் சாகச பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருதன்தோப்பு மண் சாலையில் சாகச பயணம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கீழக்கரை, கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட மருதன் தோப்பில்தாலுகா பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது.நாள்தோறும் ஏராளமானோர் மருதன் தோப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 2011ல் அமைக்கப்பட்ட கிராவல் சாலை, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.மருதன்தோப்பை சேர்ந்த முருகபூபதி கூறியதாவது; 2 கி.மீ., தொலைவிற்கு சாலை சேதமடைந்துள்ளது. கடந்தமாதம் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தால் குழாய் பதிக்கும் போது, சாலையை சேதப்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மண் மேவி உள்ளதால், வாகனத்தில் செல்வோர், விழுந்து காயமடைவது தொடர்கிறது. பத்திரப்பதிவு அலுவலகம் செல்வோரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், இடத்தை ஆய்வு செய்து புதியசாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X