பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்த கல்லூரி மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்த கல்லூரி மாணவர்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக்கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியுள்ளது. முதலாமாண்டு மாணவர்கள் பெற்றோர் பாதங்களை கழுவி பாத பூஜை செய்து முதலாமாண்டு வகுப்பிற்குள் சென்றனர். கல்லுாரி முதல்வர் அருணாச்சலம் தலைமையிலும், பேராசிரியர்கள் தர்மர், அழகுமலை முன்னிலையிலும் நடந்தது. பேராசிரியர் ஜெயக்காளை வரவேற்றார். விருதுநகர் மாவட்டம் கணக்கி சக்திகோவில் நிறுவனர் ராமச்சந்திர சுவாமி மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவராமகிருஷ்ணன், உதவி பேராசிரியர் பால்பாண்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர் பற்குணம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை