விபத்தில் சிக்கியது பள்ளி பஸ் காயமின்றி தப்பிய மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியது பள்ளி பஸ் காயமின்றி தப்பிய மாணவர்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி, காரியாபட்டி பகுதி மாணவர்கள் விருதுநகர் பாலவநத்தம் அருகே உள்ள நோபிள் மெட்ரிக்., பள்ளியில் படிக்கின்றனர். இவர்களை ஏற்றிச் செல்ல பள்ளி நிர்வாகம் பஸ்களை இயக்கி வருகிறது. நேற்று மாலை 4:30க்கு பள்ளி முடித்து மாணவர்களை ஏற்றி வந்த பஸ் கல்குறிச்சி வலையங்குளம் அருகே வரும்போது முன்பக்க 'ஆக்ஸல்' கட்டாக நிலை தடுமாறி மரத்தில் மோத இருந்த நிலையில், டிரைவர் சிவக்குமார் 42, சாமர்த்தியமாக ஓடைக்குள் திருப்பினார். பாதுகாப்பு வேலிக்காக நடப்பட்டிருந்த துாண் கல் தாங்கி பிடித்ததால் பஸ் லேசாக கவிழ்ந்து நின்றது. மாணவர்கள் காயமின்றி தப்பினர்.பெற்றோர்கள் கூறுகையில் ,' பள்ளியில் பழைய பஸ் இயக்கப்படுகிறது. அதிக அளவில் புகை வெளியில் தள்ளும் இதை மாற்ற பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். மாற்று ஏற்பாடு செய்வதாக கூறினார்களே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலர் எப்படி அனுமதி கொடுத்தார் என்பது புதிராக உள்ளது. நல்ல வேளையாக துாண் கல் தாங்கியதால் மாணவர்கள் தப்பித்தனர்,' என்றனர்.பள்ளி நிர்வாகி ஜெரால்டு ஞானரத்தினம்,''பழைய பஸ்தான் என்றாலும் 'பிட்னஸ்' சரியாக இருந்தது. புதிய பஸ்கள் வாங்கப்பட்டு வட்டார போக்குவரத்து பதிவுக்காக காத்திருக்கிறது. தற்போது ஆன் லைன் பதிவு என்பதால் தாமதம் உள்ளது. ஓரிரு நாளில் புதிய பஸ் இயக்கப்படும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை