தெற்காசிய சிலம்பம் சாம்பியன் போட்டி இந்திய அணியில் விருதுநகர் மாணவர்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெற்காசிய சிலம்பம் சாம்பியன் போட்டி இந்திய அணியில் விருதுநகர் மாணவர்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வெம்பக்கோட்டை, தெற்காசிய சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் டபள்யூ.எஸ்.எப்., என்ற உலக சிலம்பம் கூட்டமைப்பின் இரண்டாவது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டி கன்னியாகுமரி சி.எஸ்.ஐ., ஹாலில் இன்று துவங்கி 15ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட எட்டு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மினி சப்-ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என நான்கு பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடக்கின்றன. விருதுநகர் மாவட்ட மாணவர்கள் 37 பேர் இந்தியா அணி சார்பில் சீனியர் பிரிவில் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 27 மாணவர்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை