மருத்துவ குணங்களோ அதிகம் மகிழ்ச்சி தரும் தேனீ வளர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ குணங்களோ அதிகம் மகிழ்ச்சி தரும் தேனீ வளர்ப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அருப்புக்கோட்டைதேனீக்கள் அதிசயம் மிகுந்தபூச்சியினம். தேனிக்கள் போன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று அதன் உழைப்பை பார்த்து கூறுவர். தேனீக்களின் கடமை உணர்வு, ஒற்றுமை, தலைமை பண்பு, உழைப்பு, சிக்கனம், சேமிப்பு போன்ற பண்புகள் மனிதனை கவர்ந்து விட்டன. தேனீக்களை பெட்டிகளில் வைத்து வீட்டில் வளர்த்தால் தேன், தேன் மெழுகு, மகரந்தம், பிசின், தேனீ விஷம் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. தேனீ முடக்கு வாதம், மூட்டுவலி, நரம்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க வல்லது. ஒருசில நகரங்களில் கால் வலி எடுக்கும் இடங்களில் தேனீக்களை கொட்ட வைத்து 'பி தெரபி' என்ற முறையில் ஒரு கொட்டிற்கு 500 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். பசி எடுப்பதற்கும், செரிமானத்திற்கும் தேன் உகந்தது.அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேன் வளர்ப்பு பற்றி பயிற்சி தருகின்றனர். 20 க்கு மேற்பட்ட பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்த்து வருகின்றனர். தொடர்புக்கு 04566 220 561ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை