சங்க நிர்வாகிக்கு ஆதரவாக போராடிய வளர்ச்சித்துறையினர் 60 பேர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்க நிர்வாகிக்கு ஆதரவாக போராடிய வளர்ச்சித்துறையினர் 60 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கையில் சங்க நிர்வாகிக்கு ஆதரவாக போராடிய ஊரக வளர்ச்சித் துறையினர் 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார். அவர் சங்க மாவட்டத் துணைத் தலைவராக உள்ளார். அவரை பணியில் இருந்து விடுவித்து திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகிேயாரை சந்திக்க சென்றனர். மூவரும் அலுவலகத்தில் இல்லை. இதை கண்டித்து ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன் உட்பட 60 ஊழியர்கள் வளர்ச்சிப்பிரிவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'அவர்கள் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் செய்ததாக' கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயநாதன் புகாரில், சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X