சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 38 ஓட்டுச்சாவடி மையங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 38 ஓட்டுச்சாவடி மையங்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் புதிதாக 38 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மையங்களின் எண்ணிக்கை 1,348 ஆக உயர்கிறது.காரைக்குடி தொகுதியில் 330 ஓட்டுச்சாவடிகள், திருப்புத்துாரில் 322, சிவகங்கையில் 339, மானாமதுரையில் 319 என, 1,310 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. கிராமப்புறங்களில் 1,200 வாக்காளர்கள், நகரங்களில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. அதன்படி காரைக்குடி தொகுதியில் நகரங்களில் 15 ஓட்டுச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.அதேபோல் திருப்புத்துார் தொகுதியில் நகரங்களில் 12 ஓட்டுச்சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 9, மானாமதுரை தொகுதியில் 2 ஓட்டுச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லதா தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.'ஓட்டுச்சாவடி தொடர்பான ஆட்சேபனைகளை 2 நாட்களில் தெரிவிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் செப்., 1 ல் வெளியிடப்படும் அதற்குள் புதிய ஓட்டுச்சாவடிகளுக்கு அனுமதி கிடைக்கும்,' என கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை