ஆங்கில வழி புத்தகம் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கில வழி புத்தகம் இல்லை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 16 ஆங்கில வழி பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில்படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 300 பேருக்கு கணிதம், அறிவியல்,சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு புத்தகங்கள் சென்றடையவில்லை. சில மாணவர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் கிடைத்துள்ளது.புத்தகம் இல்லாத மாணவர்கள் பாடம் படிக்க முடியவில்லை. மேலும் சில பள்ளிகளில் புத்தகங்களை நகல் எடுத்து வரச்சொல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பாடநுால் தொடர்பான அதிகாரியிடம் கேட்டபோது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்து நாங்கள் புத்தகங்கள் கோரினோம். பள்ளியில் முதலில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டது. தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும், திருப்புத்துார், எஸ்.புதுார் உள்ளிட்ட பகுதிகளிலும் புதிதாக ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை.தேவையான புத்தகங்கள் எண்ணிக்கை குறித்து இயக்குனரத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X