ஊராட்சி ஒன்றியத்தில் பிட்டர் பணியிடம் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றியத்தில் பிட்டர் பணியிடம் இல்லை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை, தேவகோட்டை தாலுகாவில் தேவகோட்டை, கண்ணங்குடி யூனியன்கள்உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் அபிவிருத்தி திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுவருகிறது.பஞ்சாயத்துகளில் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள், சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துகளில் தண்ணீர்தொட்டிகளில் ஏற்படும் பழுது,பிட்டர் மூலம் சரிசெய்யப்படும். கண்ணங்குடி யூனியனில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிட்டர் பணியிடம் இல்லை. அதனால்குழாய் உடைப்பு மற்றும் பழுது பார்ப்பதற்காக தனியார் ஊழியர்களை அழைக்க வேண்டிய நிலைதான் உள்ளது. பல நேரங்களில் ஊழியர்கள் கிடைப்பதில்லை. இதனால் கிராமப்பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை தான் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை