தெர்மோகூலுக்கு வருகிறது தடை| Dinamalar

தெர்மோகூலுக்கு வருகிறது தடை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தெர்மோகூலுக்கு வருகிறது தடை

மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, 'தெர்மாகூல்' பயன்படுத்துவதற்கு, மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா, செப்டம்பரில், நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது, பிரமாண்ட விநாயகர் சிலைகளும், அலங்கார வளைவுகளும், பந்தல்களும் அமைக்கப்படும். இவற்றை அமைக்க, 'டன்' கணக்கில், தெர்மாகோல் பயன்படுத்தப்படும். மஹாராஷ்டிரா மாநில அரசு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு சமீபத்தில் தடை விதித்தது. தெர்மாகோலும், மக்காத பொருள் என்பதால், அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெர்மோகூல் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் மாசு காரணமாக, இந்த ஆண்டு முதல், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தெர்மாகோல் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த சில நாட்களாக, கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு எழுந்ததால், கடற்கரையில் பாசிப் படலம் படிந்துள்ளது. அதை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201810:49:15 IST Report Abuse
S.Kumar தெர்மோகோல் பெட்ரோலிய பொருள் பிளாஸ்டிக் மற்றும் தார் போன்ற மக்காத பொருள் அதை எரித்து பாருங்கள் கருப்பு நிறத்தில் தார் போல மாறிவிடும் இதை தடை செய்வதை வரவேற்க வேண்டும் நீரில் கரையும் களிமண் பிள்ளையாரை வணங்கினால் பிள்ளையார் வேண்டாம்ன்னு சொன்னாரா என்ன?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201819:56:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இப்படி பூதாகரமான சிலை வைச்சி அழிச்சாட்டியம் பண்ணுங்கன்னு பிள்ளையார் சொன்னாரா?...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201808:34:40 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ செல்லூர் ராஜு என்ன செய்வார்... இனி நீர் ஆவியாவதை தடுக்கவே முடியாதா...?
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201806:50:54 IST Report Abuse
ஸாயிப்ரியா அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி நம்ம விஞ்ஞானி தவிர.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை