சிமென்ட் லாரி தீ பிடித்து எரிந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் லாரி தீ பிடித்து எரிந்தது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பம்மல் : பம்மல் அருகே, ஆந்திராவில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி, தீ பிடித்து எரிந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.ஆந்திராவில் இருந்து, சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று, நேற்று காலை, பெருங்களத்துார்- - மதுரவாயல் புறவழிச்சாலையின், அணுகு சாலை வழியாக, பம்மலுக்கு வந்து கொண்டிருந்தது.லாரியை, திருப்போரூரைசேர்ந்த, குமரேசன், 44, என்பவர் ஓட்டினார். பம்மல் அருகே வந்ததும், லாரியை நிறுத்தி, ஓட்டுனர், டீ குடிக்க சென்றார்.திரும்பி வந்த போது, லாரி தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரி முற்றிலும் எரிந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை