சங்கரா ஹாலில், 'தஸ்ட்கர் கிராப்ட் மேளா'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரா ஹாலில், 'தஸ்ட்கர் கிராப்ட் மேளா'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில் நடந்து வரும், 'தஸ்ட்கர் கிராப்ட் மேளா'வில் கைத்தறி, கைவினைப் பொருட்கள், பொதுமக்களை கவர்ந்து வருகின்றன.

கைவினைஞர்கள் நல கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும் உள்ள நெசவாளர்கள், கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களின் உற்பத்தியை, 'தஸ்ட்கர் கிராப்ட் மேளா' எனும் பெயரில், கண்காட்சிகள் நடத்தி, சந்தைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில் கிராப்ட் மேளா துவக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கலம்காரி, இண்டிகோ சில்க், பாந்தினி, காட்டன் சேலைகள், ஜெய்பூர் டாப்ஸ், லெக்கின்ஸ், பாட்டியாலா பேன்ட் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன. கைவினைப் பொருட்கள் வரிசையில், பட்ட சித்ரா ஓவியங்கள், ஆந்திர மர சிற்பங்கள், உலோ மணி, டெரக்கோட்டா பொம்மைகள், ஸ்படிகம், மதுபானி ஓவியங்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

கண்காட்சியை முன்னிட்டு, கைத்தறிகளுக்கு, 20 சதவீதமும், கைவினைப் பொருட்களுக்கு, 10 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜூலை, 17ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, பார்வையாளர்கள், தினமும் காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை