வல்லூர் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வல்லூர் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : வல்லுார் அனல் மின் நிலையத்தில், 50 நாட்களுக்கு பின், மீண்டும் உற்பத்தி துவங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம், மின் வாரியத்துடன் இணைந்து, கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு, தினமும், 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வல்லுார் மின் நிலையத்தில் உள்ள, இரண்டாவது அலகில், ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக, மே, 23ல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த அலகில், 12ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை