நிலத்தரகர் கொலை 7 பேர் கோர்ட்டில் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தரகர் கொலை 7 பேர் கோர்ட்டில் சரண்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அடையாறு : நிலத்தரகர் கொலை வழக்கில், கொலையாளிகள் ஏழு பேர், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், நேற்று சரண் அடைந்தனர். அவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க, அடையாறு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை, அடையாறு, மல்லிப்பூ நகரைச் சேர்ந்தவர், சுரேஷ், 38; நிலத்தரகர். இவரை, நேற்று முன்தினம், அடையாறு, இந்திராநகர் பிரதான சாலையில் வைத்து, ஆட்டோவில் வந்த கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அடையாறு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று, அடையாறு, மல்லிப்பூ நகரை சேர்ந்த சரவணன், 36, சாமுவேல், 27, உள்ளிட்ட, ஏழு பேர், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நீதிபதி சிவசுப்ரமணியன், அவர்களை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஏழு பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க, அடையாறு போலீசார் முடிவு செய்துள்ளனர். 16ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X