என் கடைசி அன்பு முத்தங்கள்; தற்கொலைக்கு முன் டிரைவர் உருக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என் கடைசி அன்பு முத்தங்கள்; தற்கொலைக்கு முன் டிரைவர் உருக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆவடி : 'என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு, கடைசி அன்பு முத்தங்கள்' என, தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ஓட்டுனர் பேசிய, 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

சென்னை, ஆவடி கவுரிபேட்டை, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், ஜீசஸ் பாக்கியராஜ், 38; டிரைவர்.ஓய்வு நேரங்களில் பணம் வசூலித்து, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். சந்தாதாரர்கள், சரிவர பணம் செலுத்தாததால், 10ம் தேதி, ஏலச்சீட்டை கலைப்பதாக தெரிவித்து உள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், சந்தாதாரர் ஒருவர், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜீசஸ் பாக்கியராஜ், 11ம் தேதி மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்வதற்கு முன், அவர், வீடியோ ஒன்றை, சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், உருக்கமாக பேசியுள்ளது, மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோவில், அவர் பேசியதாவது: ஏலச்சீட்டு நடத்தி, ஏமாந்தது நான் தான். இதுக்கும், என் மனைவிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. கணவன் இறந்த பின், அந்த பணத்தை, மனைவி தான் கொடுக்க வேண்டும் என்பர். வெளியில் பணம் கொடுத்து, ஏமாந்தது முழுக்க, முழுக்க, நான் தான்... ஏமாற்றப்பட்டேன்...

அமீர் மீரான் என்பவர், அதிகமாக மன உளைச்சல் கொடுத்தார். அதனால் தான், என் மனைவி, மக்களை பிரிந்து போகிறேன்.ஷீலா... நீ இருக்கிற தைரியத்தில் தான், என் பிள்ளைகளை, உன்னிடம் ஒப்படைத்து போகிறேன். நான் தேடின முடிவை, நீயும் தேட வேண்டாம். உன்னை யாரும், எதுவும் கேட்க முடியாது. என் மனைவி, பிள்ளைகளுக்கு, கடைசி அன்பு முத்தங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பலர், ஜீசஸ் பாக்கியராஜுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என, கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X