ரயில்கள் பாதி வழியில் ரத்து | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் பாதி வழியில் ரத்து

Added : ஜூலை 14, 2018
Advertisement

சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், சூலுார்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 8:50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:25 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், இன்று, பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டைக்கு, காலை, 9:55 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை, 11:20 மணி மற்றும் மதியம், 1:35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே ரத்து செய்யப் பட்டுள்ளன

சூலுார்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு, மதியம், 1:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலுார்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது

நாளை :
வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 8:50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:25, மதியம் 1:25 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டைக்கு, நண்பகல், 12:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை, 11:20 மணி, மதியம், 1:35 மணி மற்றும் மாலை, 3:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

சூலுார்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு, மதியம், 1:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலுார்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம் விஜய வாடாவுக்கு இயக்கப்படும், பினாக்கினி எக்ஸ்பிரஸ், கவரைப்பேட்டை நிலையத்தில், 20 நிமிடங்கள் தாமதமாகும்

சென்ட்ரலில் இருந்து, சூலுார்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பொன்னேரி நிலையத்தில், 25 நிமிடங்கள் தாமதமாகும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை