ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி; 'பந்தா'வாக வாழ நினைத்த கல்லூரி மாணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி; 'பந்தா'வாக வாழ நினைத்த கல்லூரி மாணவன் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணம் திருட முயன்ற தனியார் கல்லுாரி மாணவனை, போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டை, பாரதி சாலை, அமீர் மஹால் அருகே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., மையம் உள்ளது.இங்கு, நேற்று அதிகாலை, 4:13 மணியளவில், முகமூடி அணிந்த படி உள்ளே நுழைந்த வாலிபர், அங்கு கண்காணிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கேமராவை கழற்றினார். தொடர்ந்து, ஏ.டி.எம்.,இயந்திரத்தை உடைக்க முற்பட்டார். இந்த நிகழ்வை, மும்பையில் உள்ள வங்கி அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின், அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இயந்திரத்தை உடைத்து, பணம் திருட முயன்ற வாலிபரை, கையும் களவுமாக பிடித்தனர். பின், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில், ஜாம்பஜார், ஜானிஜான்கான் சாலையைச் சேர்ந்த, ஷேக் சுலைமான் பாட்ஷா, 19, என்பதும், ஆவடியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிய வந்தது.

மேலும், மாலை நேரத்தில், பகுதி நேரமாக, 'ஸ்டிக்கர்' ஒட்டும் தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அண்ணாசாலை போலீசார், மாணவனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் குறித்து போலீசார் கூறியதாவது: கல்லுாரியில் பயிலும் சக மாணவர்களை போல், பந்தாவாக வாழ வேண்டும் என ஷேக் சுலைமான் பாட்ஷா நினைத்துள்ளான். மேலும், இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்; விலை உயர்ந்த மொபைல் போன் வாங்க வேண்டும் என, அவனுக்கு அடுக்கடுக்கான பல ஆசைகள் உள்ளன. ஆனால், அதற்கான வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, திருட முடிவு செய்துள்ளான். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, தி.நகரில் உள்ள தனியார், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளான்.

உடைக்க முடியாததால், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி உள்ளான். வீட்டிற்கு பாரதி சாலை வழியாக நடந்து செல்லும் போது, அமீர் மஹால் அருகே உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்., மையத்தை பார்த்துள்ளான். இங்கே முயற்சி செய்து பார்ப்போம் என, திருட முயன்ற போது சிக்கினான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை