குட்டி ஈன்றது கிழக்கு ஆசிய மலைப்பாம்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டி ஈன்றது கிழக்கு ஆசிய மலைப்பாம்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : பாம்பு பண்ணையில் உள்ள, தென் கிழக்கு ஆசிய மலைப்பாம்பு, நேற்று, ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது.

கிண்டியில் உள்ள, சிறுவர் தேசிய பூங்காவின் அருகில், சென்னை பாம்பு பண்ணை உள்ளது. 1972ல், அமெரிக்காவை சேர்ந்த, ரோமுலஸ் விட்டேக்கர் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், 1 ஏக்கர் நிலத்தில், பாம்பு பண்ணையை துவக்கினார். இங்கு, 23 வகையான பாம்புகள் உட்பட, 38 வகை ஊர்வனங்கள் உள்ளன. இதில், உலகிலேயே மிக நீளமாக வளரக்கூடியதும், அதிக எடை கொண்டதுமான, தென் கிழக்கு ஆசிய மலைப்பாம்பு, சமீபத்தில், 40 முட்டைகளை இட்டு, இரண்டரை மாதங்களுக்கும் மேல், அடைகாத்து வந்தது.

இந்த முட்டைகளிலிருந்து, ஜூலை 8 முதல், குட்டிகள் வெளிவர துவங்கின. நேற்று, ஒரே நாளில், ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகள் பிறந்து உள்ளன. அதேசமயம், கோடையின் தாக்கத்தில் சிக்கி, 20 சதவீத முட்டைகள் அழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாம்புகள் ஆராய்ச்சி மாணவர், அசாருதீன் கூறியதாவது: குஞ்சுகளை ஈன்றுள்ள பாம்பு, கடைசியாக, 2014ல் இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றது. அதில், ஒரே ஒரு குட்டி தான், தற்போது உயிருடன் உள்ளது. மற்றவை, பல்வேறு காரணங்களால் உயிரிழந்தன. இதை தடுக்க, ஒரே இனத்தை சேர்ந்த, வேறு மாநிலங்கள் அல்லது நாடுகளில் வாழும் பாம்புகள், நம் நாட்டின் உயிரியல் பூங்காக்கள், மிருகக் காட்சி சாலைகள், பாம்பு பண்ணைகளில் உள்ள, பாம்புகளுடன் இனப்பெருக்கம் செய்யப்பட வேண்டும்.அரிய வகை பாம்புகளை காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை