மருத்துவ மாணவன் தற்கொலை; தாய்க்கு உருக்கமான கடிதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவன் தற்கொலை; தாய்க்கு உருக்கமான கடிதம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தன் தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, மருத்துவ கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்தவர், திருமால், 21. நெற்குன்றம், கிருஷ்ணா நகரில் தங்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். நேற்று மாலை, தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். திருமால் தற்கொலைக்கு, காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து, கொள்ளும் முன், திருமால் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடிதத்தில், 'நான் தவறானவன். இந்த உலகத்தில் வாழும் தகுதியை இழந்துவிட்டேன். அம்மா என்னை மன்னித்து விடு. அடுத்த ஜென்மத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். என் சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல' என எழுதப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம், திருமால் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது, நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை