பைக்கில் சேலை சிக்கி தாய் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சேலை சிக்கி தாய் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாம்பரம் : இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில், மகனுடன் சென்ற தாய் பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், அண்ணாநகர், கஸ்துாரிபாய் தெருவைச் சேர்ந்தவர், வேண்டர வாசு, 50. இவரது, மனைவி சரளா, 45. இவர்களது மகன் விக்ரம், 28. நேற்று காலை, சரளாவும், விக்ரமும், முடிச்சூர் ரோடு வழியாக, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.ஜோதி நகர் அருகே வந்தபோது, சரளாவின் சேலை, இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சரளா, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த விக்ரம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை