'தொழில் துவங்க தடைகள் இல்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தொழில் துவங்க தடைகள் இல்லை'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : ''இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன; இதனால், தொழில் துவங்குவதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

'மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்' மற்றும் தேசிய மனிதவளத்துறை அமைப்புகள் இணைந்து, மனித வளத்துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து, அத்துறை மேலாளர்களுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கத்தை, சென்னையில் நடத்தின. அதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன், சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

ஒரு நுாற்றாண்டுக்கு முன், ஜப்பான் சென்று வந்த ஒருவர், சிவகாசியில் தீப்பெட்டி தொழிலை துவங்கினார். தீக்குச்சி தயாரிப்பு தொழில்நுட்பம், அந்த பகுதியையே மேம்படச் செய்தது. இன்றும், சிவகாசியில், மூன்று லட்சம் பேருக்கு, தீப்பெட்டி தொழில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.மனித வள மேலாளர் என்பவர், புதிய தொழில் நுட்பங்களை கற்பவராகவும், அதை தன் நிறுவனத்தில் உள்ளோருக்கு கற்பிப்பவராகவும் இருக்க வேண்டும்.

முன்பெல்லாம், தொழில்நுட்ப புரட்சி, மெல்ல மெல்ல வளரும். தற்போது, புரட்சி வெடிப்பு நடக்கிறது. அது, உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பெரு நிறுவனங்களை விட, சிறு நிறுவனங்கள் தான் அரசியல் உள்ளிட்ட நெருக்கடிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மனிதவள மேலாளர்கள், புவியரசியலையும், கலாசாரம் மற்றும் மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசு, 'ஒரே நாடு, ஒரே கொள்கை' என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறது. அதன் விளைவாக, 'நீட்' தேர்வு, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், காலங்காலமாக, மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் கோட்பாடுகள் உருமாற்றம் அடைகின்றன. இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன; இதனால், தொழில் துவங்குவதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டுள்ளன.மனித வள மேலாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரியாக வளர்பவராக, தங்கள்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை