நீதிபதி வீட்டில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிபதி வீட்டில் தீ

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : நீதிபதியின் வீட்டில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில், உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் வீடு உள்ளது. அங்கு, பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், சமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, பணியாளர்கள் தங்குமிடத்தில், திடீரென, தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த ஊழியர்கள், உடனடியாக, மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து, தண்ணீர் மற்றும் தீயணைப்பான் மூலம், தீயை அனைத்தனர். தீ விபத்தில், சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிகள் தீயில் எரிந்து நாசமாயின. தேனாம்பேட்டை தீயணைப்பு படையினர், தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்; அதில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
14-ஜூலை-201805:24:17 IST Report Abuse
Manian ஐயோ, அவர் நெருப்பு மாதிரி என்று சொன்னதை நம்பாதவர்களுக்கு நெற்றி அடி- வக்கீல் வந்தவாசி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை