துறைமுகத்தில் கட்டண சலுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துறைமுகத்தில் கட்டண சலுகை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை துறைமுகத்தில், சர்வதேச போக்குவரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை துறைமுக நிர்வாகத்தின் அறிக்கை: இந்திய துறைமுகங்கள் மூலம், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க, அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, கொழும்பு துறைமுகம் வாயிலாக நடக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச கடலோர சரக்கு போக்குவரத்தை ஈர்க்கவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு பயன் தரும் வகையிலும், கட்டண சலுகை அறிவிக்கப்படுகிறது.

இதன்படி, சரக்கு கப்பல்களுக்கு, கடலோர சரக்கு போக்குவரத்து கட்டணத்தில், 70 சதவீதம் குறைக்கப்படுகிறது.இதில் ஆண்டுக்கு, 25 முறைக்கு மேல் வந்துசெல்லும் கப்பல்களுக்கு, 80 சதவீதமும், வெளிநாட்டு கப்பல்களுக்கு, 5 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை