ரூ.33 லட்சம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.33 லட்சம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மலேஷியா மற்றும் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, 800 கிராம் தங்க கட்டிகள் மற்றும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அமெரிக்கா நாட்டு கரன்சிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'பாட்டிக் ஏர்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த நபர் ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரின் இடுப்பு மற்றும் பேன்ட் பையில் இருந்து, ௩௦௦ கிராம் தங்க கட்டிகள், 8.26 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், துபாயில் இருந்து, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று அதிகாலை, 5:௦௦ மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, 63 வயதுடைய முதியவரின், சூட்கேசை, அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதன், 'ஜிப்' பகுதியில், கயிறு வடிவில், 500 கிராம் தங்கம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சென்னையில் நேற்று முன்தினம், 1:30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும், 'ஸ்கூட் ஏர்வேஸ்' விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, 39 வயதுடைய நபரின் பேன்ட் பாக்கெட்டில், 15 ஆயிரம் அமெரிக்கா நாட்டு கரன்சிகள், இந்தியா மதிப்பில், 10.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட, மூவரிடமும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை