முதியவர் தவறவிட்ட ரூ.30,000 ; ஊர்க்காவல் படைவீரரால் கிடைத்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் தவறவிட்ட ரூ.30,000 ; ஊர்க்காவல் படைவீரரால் கிடைத்தது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : புரசைவாக்கத்தில், முதியவர் ஒருவர் தவறவிட்ட, 30 ஆயிரம் ரூபாயை, ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் கண்டெடுத்து, போலீசார் வாயிலாக, மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், கஜேந்திரன், 82. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர், நேற்று முன்தினம் காலை, 11:20 மணியளவில், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சட்டைப்பையில், வெள்ளை நிற கவரில் வைத்திருந்த, 30 ஆயிரம் ரூபாயை தவறவிட்டு உள்ளார். அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற, அதே பகுதியைச்சேர்ந்த, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த, ராஜா, 43, என்பவர், பணத்தை கண்டெடுத்து, வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இரவு முழுவதும் பணத்தை தவற விட்ட இடம் தெரியாமல் தவித்த கஜேந்திரன், நேற்று காலை, 11:00 மணிக்கு, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம், இன்ஸ்பெக்டர், வீரக்குமார் விசாரித்தார். அப்போது, ராஜா கண்டெடுத்து கொடுத்த பணம், கஜேந்திரனுடையது என, தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம், 30 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்தனர். அப்போது முதியவர், அங்கு இருந்த ராஜா மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X