கல்வி நிறுவனங்கள் வாயிலாக ரூ.13.61 கோடி சொத்து வரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி நிறுவனங்கள் வாயிலாக ரூ.13.61 கோடி சொத்து வரி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை மாநகராட்சி, கல்வி நிறுவனங்கள் வாயிலாக, 13.61 கோடி ரூபாய் சொத்து வரியை வசூலிக்கிறது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில் உள்ள, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவன கட்டடங்கள் மீது, 60 சதவீத சொத்து வரி விதிக்க, 2017 - 18 நிதியாண்டில், தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட, அரசு உதவி பெற்று, சுயநிதி அடிப்படையில் இயங்கும் கல்வி நிறுவன கட்டடங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன கட்டடங்கள் என, 1,085 கட்டடங்களுக்கு, சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில், 13.61 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட உள்ளது.

அதேபோல், மாநகராட்சிக்கு சொந்தமான, 153 வணிக வளாகங்களில், 6,240 கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு, தற்போதுள்ள சந்தை வாடகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2018 - 19 நிதியாண்டில், இந்த மாதம் வரையிலான கேட்புத்தொகை, 38.43 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, கல்வி நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை யும், வணிக வளாக கடைகள் செலுத்த வேண்டிய வாடகைகளையும், விரைவில் செலுத்தி, நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை