50,000 இடங்களில், 'சிசிடிவி' கேமரா; இலக்கு நிர்ணயித்து போலீஸ் தீவிரம்| Dinamalar

தமிழ்நாடு

50,000 இடங்களில், 'சிசிடிவி' கேமரா; இலக்கு நிர்ணயித்து போலீஸ் தீவிரம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
50,000 இடங்களில், 'சிசிடிவி' கேமரா; இலக்கு நிர்ணயித்து போலீஸ் தீவிரம்

சென்னை மாநகர் முழுவதும், 50 ஆயிரம் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, இலக்கு நிர்ணயித்து, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை மாநகரில், மொபைல் போன் மற்றும் செயின் பறிப்பு குற்றங்களை, போலீசாரால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பனைக்கும் பஞ்சமில்லை. குற்ற செயல்களை தடுக்கும் நோக்கத்தில், சென்னை முழுவதும், 'சிசிடிவி' எனப்படும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

கடந்த, 2016ல், திருவொற்றியூர் துவங்கி, மாங்காடு வரை, சென்னை மாநகர் முழுவதும் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த, போலீசார், 27,728 இடங்களை தேர்வு செய்தனர். இதில், 20,995 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன; அவற்றில் சில பழுதடைந்துவிட்டன.

தற்போது, அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன், 50 ஆயிரம் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, போலீசார் இலக்கு நிர்ணயித்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக, கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து, சென்னை மாநகர் முழுவதும், இணை, துணை கமிஷனர்கள் தலைமையில், விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, குடியிருப்போர் நல சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடத்திற்கு, முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை போன்று, மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும், 'பேஸ் டிராக்கர்' வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை, அனைத்து இடங்களிலும் விரிவுப்படுத்த உள்ளோம். சென்னை மாநகரையே, கண்காணிப்புக்குள் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூலை-201808:51:18 IST Report Abuse
Srinivasan Kannaiya அமைத்தல் பிரச்சினை கிடையாது... அதை பராமரிக்க நிதி வேண்டும்... அவற்றில் பிரச்சினை வரும்பொழுது சரி செய்ய நிரந்தரமான அப்னியாளர் வேண்டும்... அந்த கேமராக்களில் பதிவாகும் நிகழ்ச்சிகளை கணினியில் பார்த்து சமூக விரோத செயல்களை அந்தஅந்த காவலதுறைக்கு சொல்ல நேர்மையான பணியாளர்கள் தேவை... பத்து கேமராவுக்கு ஒருவர் என்றால் கூட ஒரு ஷிப்ட்டிற்கு அய்யாயிரம் கணினி இயக்குனர்கள் வீதம் மூன்று ஷிப்ட்டுக்கும் மொத்தம் பதினாய்யாயிரம் பேர் வேண்டுமே...
Rate this:
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
15-ஜூலை-201807:05:13 IST Report Abuse
aanthai அந்த கேமரா ஒழுங்காக வேலை செய்யவும் , திருடு போகாமல் இருக்கவும் ஏற்பாடு செய்யவும் . இல்லையேல் கேமெராவே காணாமல் போய்விடும் .
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:16:26 IST Report Abuse
ஜெயந்தன் காவல் நிலையங்களை தவிர தானே ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை