கண்டக்டர் இல்லாமல் ஓடும் பஸ்கள் பயணியர் ஆதரவு; சங்கங்கள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டக்டர் இல்லாமல் ஓடும் பஸ்கள் பயணியர் ஆதரவு; சங்கங்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கண்டக்டர் இல்லாமல் ஓடும் பஸ்கள்  பயணியர் ஆதரவு; சங்கங்கள் எதிர்ப்பு

சென்னை:நடத்துனர்கள் இல்லாத பஸ்களுக்கு, பயணியரிடம் ஆதரவும், தொழிலாளர்களிடம் எதிர்ப்பும் உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஏற்கனவே, 'ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட்' என, பல்வேறு பெயர்களில், இடையில் நிற்காத பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 6ம் தேதி முதல், 231 பஸ்கள், ஒன் டூ ஒன் என்ற பெயரில், கண்டக்டர்கள் இல்லாத பஸ்களாக இயக்கப்படுகின்றன. இது, பயணியரிடையே வரவேற்பையும், ஊழியர்களிடம் எதிர்ப்பையும், ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, சேலம் கோட்டத்தில், 40; கோவை, 91; விழுப்புரம், 28; கும்பகோணம், 42; மதுரை, 10 மற்றும் நெல்லை கோட்டத்தில், 20 என, மொத்தம், 231 பஸ்கள், கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இவை பஸ் நிலையத்தில் நிற்கும்போது, அங்குள்ள பொது நடத்துனர், பயணியருக்கு டிக்கெட் கொடுத்து, கதவை அடைத்து, ஓட்டுனருக்கு இயக்க உத்தரவிடுகிறார்.

பஸ் உரிய இடத்தில், பயணியர் இறக்கி விடப்பட்டதும், அங்குள்ள பொது கண்டக்டர், டிக்கெட்டுகளை வினியோகித்து, இயக்க உத்தரவிடுகிறார்.பயணியர் கூறியதாவது:பஸ் நிலையத்தில் உள்ள, கண்டக்டர் இல்லாத பஸ்சில், பயணியர் நிரம்பியவுடன் கதவு சாத்தப்படுகிறது. இடையில் எங்கும் நிற்பதில்லை. அதனால், வாடகை காரில் பயணிக்கும் உணர்வு ஏற்படுவதோடு, விரைவாக சென்று சேர முடிகிறது. எக்ஸ்பிரஸ் கட்டணம் மட்டுமே பெறப்படுவதால், பயணியருக்கு நல்ல வசதியாக உள்ளது.
பஸ்சில், அனைவரும் ஏறி அமர்ந்த பின் தான், கண்டக்டர் டிக்கெட் கொடுக்கிறார். அதற்குப் பதில், ஒரு டிக்கெட் கொடுக்கும் மையம் திறந்தால், பயணியரே வாங்கி வந்து, அமர்ந்து விடுவர்; நேர விரயம் குறையும். என்றாலும், விரைவு பயணத்துக்கு உதவும் இத்திட்டத்தை, மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:தமிழக அரசு, தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதமாக, கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்குகிறது. மோட்டார் வாகன சட்டம், பொது மக்கள் பயன்பாட்டுக்கான வாகனங்களில், நடத்துனர் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. டிக்கெட் கொடுப்பது மட்டுமே, நடத்துனர் பணி இல்லை. மேலும், ஓட்டுனருக்கு உதவியாக, பஸ்சையும் பயணியரையும் கண்காணித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.அதேபோல், வளைவில் திரும்பும்போதும், பின்னோக்கி செல்லும்போதும், ஓட்டுனருக்கு வழிகாட்டியாக உள்ளார்.
பயணியரின் அவசர தேவைகளை உணர்ந்து, ஓட்டுனரை நிறுத்தவோ, வேகமாக இயக்கவோ அறிவுறுத்துகிறார். வழித்தடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை, நடத்துனர் தான், முதலில் கையாள்கிறார். இவ்வாறு, பல நிலைகளில், பயணியருக்கும் ஓட்டுனருக்கும் உதவியாக இருக்கும், நடத்துனர் பணியிடத்தை குறைப்பது, தொழிலாளர் சட்டப்படி குற்றம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் கூறியதாவது:தற்போது, சோதனை முறையில் தான், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பயணியர் கூறும் குறைபாடுகள் ஏற்கப்பட்டு, சரி செய்யப்படும். விரைவில், 250க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த பஸ்கள் இயக்கப் படும் கோட்ட மேலாளர்கள், 'கோடை விடுமுறையின் போதே, இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம்; பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது' என்கின்றனர்.

நடத்துனர்கள், விடுப்பு எடுக்கும் சமயத்தில், பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுகின்றன. இதனால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சங்கங்கள், குறை கூறுவதை விடுத்து, இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கூறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15-ஜூலை-201803:20:44 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) தொழிற் சங்கத்தின் முக்கிய வேலையே கோஷம் போடுவது கொடி பிடிப்பது காலை வாருவது அடுத்தவன் முன்னேற விடாமல் தடுப்பது . மக்களின் நன்மைக்காகத்தான் பேருந்துகள் உள்ளன .தொழிற்சங்க நன்மைக்கு அல்ல இவர்கள் உளறிக்கொண்டே இருப்பார்கள் . அரசு இதை முழு வீச்சில் செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:10:59 IST Report Abuse
Bhaskaran தொழிற்சங்கங்கள் நிறுவனங்கள் நன்கு செயல்படவேண்டும் அப்போதுதான் நாமும் நன்றாக இருக்கமுடியும் என்று சிந்தித்து அரசுக்கு துணைநிற்கவேண்டும் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு காட்டினால் முன்னேற்றமே கிடையாது நிறுவனங்கள் திவால் தான்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூலை-201814:08:08 IST Report Abuse
சுந்தரம் டிரைவர்கள் டிக்கட் கொடுத்து பஸ்களை இயக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X