மேலாண் இயக்குனர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலாண் இயக்குனர் ஆய்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநில மேலாண்மை இயக்குனர் வள்ளலார் தலைமை வகித்தார். கலெக்டர் எம்.பல்லவிபல்தேவ் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறையின் சார்பில், 5 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.24.22 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பில் உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை, வள்ளலார் வழங்கினார். திட்டங்கள், பொருளாதார மேம்பாடுகள் குறித்து விளக்கினார்.டி.ஆர்.ஓ., (பொ) நாகஜோதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசுவாமி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை