அணைகள் நீர் இருப்பு 90 டி.எம்.சி.,யாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அணைகள் நீர் இருப்பு 90 டி.எம்.சி.,யாக அதிகரிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தென் மேற்கு பருவ மழை காரணமாக, முக்கிய அணைகளின் நீர் இருப்பு, 90 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 15 பெரிய அணைகள், பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ளன. தென் மேற்கு பருவ மழை காரணமாக, இவற்றில் பல அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.தேனி மாவட்டம், முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம், 5.2 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால், அணைக்கு, நேற்று வினாடிக்கு, 3,598 கன அடி நீர்வரத்து கிடைத்தது.
கோவை - சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதியில், அதிகபட்சமாக, 12.4 செ.மீ., மழை பெய்ததால், வினாடிக்கு, 6,191 கன அடி நீர்வரத்து உள்ளது. அணை, ஏற்கனவே நிரம்பி விட்டதால், உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.பரம்பிக்குளம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த, 4.2 செ.மீ., மழையால், வினாடிக்கு, 6,987 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், 5.3 செ.மீ., மழை பெய்ததால், வினாடிக்கு, 2,569 கன அடி நீர் வருகிறது.கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கும்; நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அமராவதி, ஆழியாறு அணைகளுக்கும், அதிக அளவில் தண்ணீர் கிடைத்து வருகிறது.இதனால், 15 அணைகளின் நீர் இருப்பு, 90 டி.எம்.சி.,யாக உயர்ந்து உள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 198 டி.எம்.சி., அதிகபட்சமாக, மேட்டூரில், 38 டி.எம்.சி.,யும், பவானிசாகரில், 18.4 டி.எம்.சி.,யும் நீர் உள்ளது. மழை தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை