முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஆதரவு கொடுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஆதரவு கொடுங்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி, சென்னையில் உள்ள, வெளிநாட்டு துணைத் துாதர்களுக்கு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழக அரசு, சென்னையில், 2019 ஜனவரியில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது. இதற்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. இப்போதில் இருந்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, மாநாட்டின் போது உரிய பலனை அடைய முடியும். இதற்காக, சென்னையில் உள்ள, வெளிநாட்டு துணை துாதர்களுக்கு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்து உள்ளது.
இது குறித்து, அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:எந்த நாட்டை சேர்ந்தோராக இருந்தாலும், அவர்களை, துாதரகம் வழியாகத்தான், தமிழகத்திற்கு அழைக்க முடியும். எனவே, சென்னையில் உள்ள துாதரங்களுடன் தொடர்பில் உள்ளோம். அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேஷியா உட்பட, 30க்கும் மேற்பட்ட துணை துாதர்களுக்கு, இதற்காக அழைப்பு விடுத்துள்ளோம்.
அவர்களுடன், ஜூலை, 18ல், சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை அமைச்சர் சம்பத் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில், முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற உதவ வேண்டும் எனவும், தங்கள் நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை, தமிழகத்தில் தொழில் துவங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X