'டெங்கு' காய்ச்சலை தடுக்க முயற்சி: டாக்டர்களுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' காய்ச்சலை தடுக்க முயற்சி: டாக்டர்களுக்கு அறிவுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:'டெங்கு' காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் வகையில், வட்டார வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, டாக்டர்களிடம், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், அறிவுரை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில், 2017ல் டெங்கு காய்ச்சலுக்கு, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்; 65 பேர் வரை உயிரிழந்தனர்.

விழிப்புணர்வு

இதனால், நாட்டில், அதிகம் டெங்கு பாதித்த மாநிலமாக, தமிழகம் உருவெடுத்தது. அதுபோன்ற நிலை, நடப்பாண்டில் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதவாது:தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. நடப்பாண்டில், இதுவரை, 2,000 பேர் பாதிக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், முன்பு போல், டெங்கு பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் ஆய்வு நடந்து வருகிறது. கொசு உற்பத்தி செய்யும் வகையிலான வீடுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து, அரசு மற்றும், தனியார் மருத்துவ மனைகளில், வட்டார வாரியாக, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆலோசனை முடிந்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிகிச்சை

அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் செயல்படும், 24 மணி நேர காய்ச்சல் வார்டுகள் தொடர்ந்து செயல்படும். எனவே, காய்ச்சல் வந்தால், பொதுமக்கள் உடனடியாக டாக்டரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை